Here is your Daily Prediction, Lucky No. Lucky Direction and Lucky Colour in Multi Languages at
www.dailyrasipalan.in
Daily Rasi Palan 16 December 2024 Monday
Maargzhi 1
(All times indicated are of Indian Standard Times)
TODAY'S PANCHANGAM DETAILS
Sun Rising Time: 06.21 am.
Today Star: Mirugasheerisham up to 03.37 am then Thiruvaathirai.
Today's Thithi: Pradhamai up to 01.54 pm then Dwitiyai.
Today's Yogam: Sidhdha Yogam.
Auspicious Time: 06.15 am to 07.15 am and 04.45 pm to 05.45 pm.
Raghu Kalam: 07.30 am to 09.00 am.
Yemagandam: 10.30 am to 12.00 Noon.
Kuligai Kalam: 01.30 pm to 03.00 pm.
Soolam: East.
Parigaram: Curd (Thayir)
Today Chandraashtama Star: Visaagam up to 03.37 am then Anusham.
DAILY RASI PALAN IN ENGLISH
Mesham Rasi:
An up and down will occur in money income. Understanding about family members will occur. Think and perform while giving promises. Existing blocks/barriers in external citizenship will remove. Get the expected transfer. You will be taking some decisions with courage/boldness at mental level. Travelling related to divine prayers will be favorable. A day filled with full of good.
Lucky No. 6
Lucky Direction: Southwest.
Lucky Colour: Dark Green.
Ashwini Star: Understanding will occur.
Bharani Star: Blocks/barriers will remove.
Kaarthigai Star: Travelling will be favorable.
Rishabam Rasi:
Desires thought in your mind for a long time will fulfill. Avoid opinions about others. Get co-operations in council work. Performing economically will be good. Changes will be seen in Government work. Ripples will occur by colleagues/co-workers. Competitions will occur in trading work. A day full of confidence/hope is needed.
Lucky No. 7
Lucky Direction: South.
Lucky Colour: Green Colour.
Kaarthigai Star: Desires will fulfill.
Rohini Star: Get co-operations.
Mirugasheerisham Star: Competitions will occur.
Midhunam Rasi:
Get support in the way of the father. Interest will occur in service work. Being without interfering in the problems of others will be good. Get some clarities in thinking trends. Business related thinking will improve. Responsibilities will improve in official duties. New type of self-confidence will occur at mental level. Maintain patience in case matters. A day full of desire will be improving.
Lucky No. 4
Lucky Direction: North.
Lucky Colour: White Ash Colour.
Mirugaseerisham Star: Get support.
Thiruvaathirai Star: Get clarities.
Punarpoosam Star: Self-confidence will improve.
Kadagam Rasi:
Ripples will form through unexpected some travelling. Fatigue will occur through unspecified thinking. Adjust and move those who are together with you in official duties. You will do and complete the blocked/interrupted works through some help. Give up and move between friends. Move with patience with opposite sex peoples. A day filled with full of hikes.
Lucky No. 3
Lucky direction: South.
Lucky Colour: Yellow Colour.
Punarpoosam Star: Ripples will occur.
Poosam Star: Adjust and move.
Aayilyam Star: Perform with patience.
Simmam Rasi:
Interest will increase in arts related performances. Co-operations will improve in the way of brothers. Care is needed in exposing the thoughts arising in your mind. Gain will occur through native properties. Depending on the future, you will be making some decisions. Improvement will occur through luckiest some opportunities. A day full of getting prizes.
Lucky No. 7
Lucky Direction: Southeast.
Lucky Colour: Pink Colour.
Magam Star: Co-operation will improve.
Pooram Star: Get gain.
Uththiram Star: Improvement will occur.
Kanni Rasi:
Existing sluggishness in trading work will reduce. Avoid the discussions/arguments with higher officials. Think and perform in new performances. Existing delays in efforts will reduce. Gains will occur by famous people. Good/auspicious activity loss will occur. A type of interest will occur in wrestling competitions. A day filled with full of expenses.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Light Blue Colour.
Uththiram Star: Avoid arguments.
Hastham Star: Delay will reduce.
Chiththirai Star: Interest will occur.
Thulaam Rasi:
Get new experience through travelling. Fatigue will occur by negative thinking. Prudence performances will avoid vain problems. Avoid useless speeches with the people, those who are together with you. Interest will occur in luxury items. Stomach related problems will arise and disappear. Unexpected some luckiest opportunities will occur. A day filled with full of benefits.
Lucky No. 8
Lucky Direction: Southwest.
Lucky Colour: Blue Colour.
Chiththirai Star: Get experience.
Swaathi Star: Interest will occur.
Visaagam Star: Get opportunities.
Viruchchigam Rasi:
A type of fatigue will occur in performances through old memories. Husbands and wives have to give up and move among them. Avoid unnecessary discussions/arguments with new person's. Up and down situations will occur in cash inflows. Critical situations will occur through unexpected expenses. Understanding about the people, those who are together with you will improve. A day full of sobriety is needed.
Lucky No. 3
Lucky Direction: Southeast.
Lucky Colour: Orange Colour.
Visaagam Star: Fatigue will occur.
Anusham Star: Avoid arguments.
Kettai Star: Understandings will improve.
Thanusu Rasi:
Changes will occur by the suggestions of friends. Refreshing thinking will increase in mind. Good/auspicious activity related thoughts will improve. You will be happy by procuring the favorite items to your mind. Favorable results will occur in competitive examinations. Co-operations will occur with allies. Think and perform in trading work. A day full of clarity will be born.
Lucky No. 5
Lucky Direction: North.
Lucky Colour: Pink Colour.
Moolam Star: Changes will occur.
Pooraadam Star: Favour will occur.
Uththiraadam Star: Think and perform.
Maharam Rasi:
Guests' arrivals will occur. Superiority will occur in livestock trading. You will be fulfilling the needs of close ones. Existing fatigue in the body will reduce. Unexpected materials income will occur. You will do and complete the dragging work. Get the expected results in competitive examinations. A day filled with full of assurance/confirm.
Lucky No. 8
Lucky Direction: South.
Lucky Colour: Algae Colour.
Uththiraadam Star: Superiority will occur.
Thiruvonam Star: Fatigue will reduce.
Avittam Star: Get results.
Kumbam Rasi:
You will get to understand the indirect protests. Confidence will improve through generous actions. Clear decisions/results will be born for dragging some matters. Think and perform in entertainment matters. Interest will increase in insurance related matters. Values/respects will increase through experiential speeches. A day full of effort will be fulfilling.
Lucky No. 3
Lucky Direction: South.
Lucky Colour: Pink Colour.
Avittam Star: Understanding will occur.
Sadhayam Star: Results will be born.
Poorattaadhi Star: Values/respects will increase.
Meenam Rasi:
Happiest situations will occur in the family. Existing crisis in money income will reduce. Clear results/decisions will be born for mind blocking some matters. Gain will occur through other language peoples. Some change will occur in thinking trends. Happiness will occur by relatives' arrivals. Superiority will occur in agriculture work. A day full of compassion/sympathy is needed.
Lucky No. 5
Lucky Direction: East.
Lucky Colour: Ash colour.
Poorattaadhi Star: Crisis will reduce.
Uththirattaadhi Star: Results will be born.
Revathi Star: Superiority will occur.
DAILY RASI PALAN IN TAMIL
மேஷம் ராசி:
தன வரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதளவில் துணிவோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 6
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை நிறம்.
அஸ்வினி: புரிதல் ஏற்படும்.
பரணி: தடைகள் விலகும்.
கார்த்திகை: பயணங்கள் சாதகமாகும்.
ரிஷபம் ராசி:
மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. அரசுப் பணிகளில் மாற்றங்கள் காணப்படும். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை நிறம்.
கார்த்திகை: ஆசைகள் நிறைவேறும்.
ரோஹிணி: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
ம்ருகஷீரிஷம்: போட்டிகள் உண்டாகும்.
மிதுனம் ராசி:
தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப்போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். ஆசை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 4
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெண்சாம்பல் நிறம்.
ம்ருகஷீரிஷம்: ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை: தெளிவுகள் பிறக்கும்.
புனர்பூசம்: தன்னம்பிக்கை மேம்படும்.
கடகம் ராசி:
எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் நிறம்.
புனர்பூசம்: அலைச்சல் ஏற்படும்.
பூசம்: அனுசரித்துச் செல்லவும்.
ஆயில்யம்: பொறுமையுடன் செயல்படவும்.
சிம்மம் ராசி:
கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 7
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிகப்பு நிறம்.
மகம்: ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூரம்: ஆதாயம் கிடைக்கும்.
உத்திரம்: முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி ராசி:
வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய விரயம் ஏற்படும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்நீல நிறம்.
உத்திரம்: வாதங்களை தவிர்க்கவும்.
ஹஸ்தம்: தாமதம் குறையும்.
சித்திரை: ஆர்வம் ஏற்படும்.
துலாம் ராசி:
பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். விவேகமான செயல்கள் வீண் பிரச்சினைகளை தவிர்க்கும். உடன் இருப்பவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்.
சித்திரை: அனுபவம் கிடைக்கும்.
ஸ்வாதி: ஆர்வம் ஏற்படும்.
விசாகம்: வாய்ப்புகள் கிடைக்கும்.
விருச்சிகம் ராசி:
பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு நிறம்.
விசாகம்: சோர்வு உண்டாகும்.
அனுஷம்: வாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை: புரிதல்கள் மேம்படும்.
தனுசு ராசி:
நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: வடக்கு.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர்சிவப்பு நிறம்.
மூலம்: மாற்றங்கள் ஏற்படும்.
பூராடம்: சாதகம் உண்டாகும்.
உத்திராடம்: சிந்தித்துச் செயல்படவும்.
மகரம் ராசி:
விருந்தினர்களின் வருகை ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண்: 8
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: பாச நிறம்.
உத்திராடம்: மேன்மை ஏற்படும்.
திருவோணம்: சோர்வு குறையும்.
அவிட்டம்: முடிவுகள் கிடைக்கும்.
கும்பம் ராசி:
மறைமுகமான எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்ட திசை: தெற்கு.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு நிறம்.
அவிட்டம்: புரிதல் ஏற்படும்.
சதயம்: முடிவுகள் பிறக்கும்.
பூரட்டாதி: மதிப்புகள் அதிகரிக்கும்.
மீனம் ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பிறமொழி மக்களால் ஆதாயம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட திசை: கிழக்கு.
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
பூரட்டாதி: நெருக்கடிகள் குறையும்.
உத்திரட்டாதி: முடிவுகள் பிறக்கும்.
ரேவதி: மேன்மை ஏற்படும்.
DAILY RASI PALAN IN MALAY
DAILY RASI PALAN IN SINHALA
0 comments:
Post a Comment